/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
28 மெட்ரோ ரயில்கள் வாங்க ரூ.2,000 கோடிக்கு 'டெண்டர்'
/
28 மெட்ரோ ரயில்கள் வாங்க ரூ.2,000 கோடிக்கு 'டெண்டர்'
28 மெட்ரோ ரயில்கள் வாங்க ரூ.2,000 கோடிக்கு 'டெண்டர்'
28 மெட்ரோ ரயில்கள் வாங்க ரூ.2,000 கோடிக்கு 'டெண்டர்'
ADDED : செப் 06, 2025 02:20 AM
சென்னை :'ஆறு பெட்டிகளுடன் இயக்கப்படும், 28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்குவதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 4 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். பீக் ஹவர்களில் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருவதால், கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பயணியரின் கோரிக்கையை ஏற்று, அலுவலக நேரங்களில் ஆறு பெட்டிகளாக இணைத்து இயக்குவது குறித்த ஆய்வு அறிக்கை, தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
தற்போதுள்ள, முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அதிகபட்சமாக இரண்டரை நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்கும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி இருக்கிறது.
பயணியரின் தேவைக்கு ஏற்றார்போல், மெட்ரோ ரயில் சேவையின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறோம்.
வரும் ஆண்டுகளில் பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் போது, கூடுதல் ரயில்களை இயக்கவும் தயாராக உள்ளோம்.
அதன்படி, முதல் முறையாக ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுளோம். தற்போதுள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், போதிய அளவில் நடைமேடை வசதி இருப்பதால், விரிவாக்க பணிகள் மேற் கொள்ள வேண்டியதில்லை.
முதல்கட்டமாக, 28 புதிய மெட்ரோ ரயில்கள் 2,000 கோடி ரூபாயில் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, நிதி உதவியை பெற பல்வேறு வங்கிகளிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு மாதங்களில் நிதி வசதி கிடைத்தவுடன், விரைவில் டெண்டர் வெளியிடப்படும். அதன் பிறகு, புதிய மெட்ரோ ரயில் கள் படிப்படியாக கொண்டு வரப்பட்டு, சேவையில் இணைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.