sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் அடுத்த ஆட்சி துவக்கத்தில் திறப்பு: ஸ்டாலின்

/

 தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் அடுத்த ஆட்சி துவக்கத்தில் திறப்பு: ஸ்டாலின்

 தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் அடுத்த ஆட்சி துவக்கத்தில் திறப்பு: ஸ்டாலின்

 தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் அடுத்த ஆட்சி துவக்கத்தில் திறப்பு: ஸ்டாலின்


ADDED : மார் 05, 2026 05:28 AM

Google News

ADDED : மார் 05, 2026 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சென்னையின் புது அடையாளமாக உருவாகி வரும் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம், அடுத்த ஆட்சியின் துவக்கத்தில் திறக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, அண்ணாசாலையில், தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே உள்ள ஐந்து போக்கு வரத்து சிக்னல்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த இடத்தை கடந்து செல்வதற்கு, 30 நிமிடங்கள் வரை வீணாகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நெடுஞ்சாலைத் துறை மூலம், 621 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

உலகில் முதல் முறையாக, பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கத்தின் மேல் அமைக்கப்படும் முதல் மேம்பாலம் இது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 3.20 கி.மீ., நீளத்திற்கு இரும்பு துாண்கள் மூலம் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், பயண நேரம் ஐந்து நிமிடங்களாக குறையும்.

கடந்த ஜன., மாதம் பாலம் கட்டுமான பணியை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. வெளிமாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில், இதற்கென இரும்பு துாண்கள் மற்றும் சாரங்கள் தயாரிப்பு பணி தாமதமாகி வருகிறது.

மேலும், இரவு நேரங்களில் மட்டுமே பணியை மேற்கொள்ள சென்னை போக்குவரத்து போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால், மேம்பாலம் கட்டுமான பணிகள் தாமதமாகி வருகின்றன.

இந்நிலையில், மேம்பாலம் கட்டும் பணியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். உடன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் வேலு, சுப்பிரமணியன், அன்பரசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை மேம்பாலம், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்படும் முதல் உயர்மட்ட சாலை, சென்னையின் புதிய அடையாளமாக, மிக வேகமாக உருவாகி வருகிறது.

இந்த மிக நீண்ட மேம்பாலத்தை, அடுத்து அமையவுள்ள தி.மு.க., ஆட்சியின் துவக்கத்திலேயே, மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us