/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாளமுத்து - நடராஜன் நினைவிடம்: முதல்வர் திறப்பு
/
தாளமுத்து - நடராஜன் நினைவிடம்: முதல்வர் திறப்பு
ADDED : ஜன 26, 2025 02:34 AM
மூலக்கொத்தளம்:ஹிந்தி திணிப்புக்கு எதிராக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள், தாளமுத்து -- நடராசன் ஆகியோரின் நினைவிடம் சென்னை மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ளது.
இந்த நினைவிடம், தமிழக அரசால் 34 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ் மொழி தியாகிகள் நினைவு நாளையொட்டி, மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து -- நடராசன் ஆகியோரின் நினைவிடத்தை, முதல்வர் ஸ்டாலின், பேரணியாக சென்று நேற்று திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி., கலாநிதி வீராசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் ராஜாராமன் உள்ளிட்டோரும் மலர் துாவி மரியாதை செய்தனர்.
மேலும், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன், த.வெ.க., பொதுச் செயலர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், பேரணியாக சென்று தாளமுத்து -- நடராசன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க., சார்பில், தண்டையார்பேட்டையில், வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், மின்ட் பகுதியில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

