/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுவருடன் தரை உள்வாங்கியது அடுக்குமாடி குடியிருப்பும் சேதம்
/
சுவருடன் தரை உள்வாங்கியது அடுக்குமாடி குடியிருப்பும் சேதம்
சுவருடன் தரை உள்வாங்கியது அடுக்குமாடி குடியிருப்பும் சேதம்
சுவருடன் தரை உள்வாங்கியது அடுக்குமாடி குடியிருப்பும் சேதம்
ADDED : அக் 16, 2024 12:19 AM

அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில், 'நெல்சன் சேம்பர்' எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் அருகில் மற்றொரு அடுக்குமாடி கட்டடத்திற்கான கட்டுமான பணிகள் நடக்கின்றன.
நேற்று பெய்த தொடர் கனமழையால், கட்டுமான பணி நடக்கும் இடத்தின் அருகில் உள்ள, 'நெல்சன் சேம்பர்' குடியிருப்பின் தடுப்பு சுவருடன், வாகன நிறுத்துமிடமும் திடீரென உள்வாங்கியது.
இதனால், 150 மீ., துாரத்திற்கு, 10 அடி அகலத்திற்கு தரையுடன் சுற்றுசுவரும் உள்வாங்கியது. அத்துடன், அருகில் இருந்த 'பி - பிளாக்' குடியிருப்பின் கீழ் தளத்தின் சுவரிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது.
முறையான மண் பரிசோதனை செய்யாமல், அலட்சியமாக கட்டுமான பணிகள் செய்வதால் விபரீதம் நடந்ததாக குடியிருப்பு மக்கள் குற்றம்சாட்டினர். இதனால், குடியிருப்புவாசிகளுக்கும், கட்டுமான நிறுவன ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதானத்திற்கு பின், சேதமடைந்த பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
கூரை விழுந்து
சிறுவன் காயம்
மழையால் வீட்டின் மேற்கூரை சிமென்ட் பூச்சு உடைந்து விழுந்ததில் வியாசர்பாடி, கல்யாணபுரம், 1வது தெருவைச் சேர்ந்தவர் நாகப்பன் மகன் வெற்றிவேல், 10, என்பவரின் வாயில் அடிபட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பெரியமேடு, குரு தெருவில் உள்ள லெதர் பொருட்கள் விற்பனை கடையில், ஊழியராக பணிபுரிந்து வருபவர், சையது, 55. நேற்று மதியம், கடையில் உள்ள சமையல் அறையில், மின்விளக்கு சுவிட்ச் போட்டபோது, மின்சாரதம் தாக்கி மயங்கி விழுந்தார்.
உடனே அவரை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.