/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹோட்டல் உரிமையாளரின் மண்டை உடைத்த ஆசாமி
/
ஹோட்டல் உரிமையாளரின் மண்டை உடைத்த ஆசாமி
ADDED : ஜன 15, 2024 02:02 AM
பாண்டிபஜார்:தி.நகர் பசுல்லா சாலையை சேர்ந்தவர், பன்னீர் செல்வம் 32. இவர், தி.நகர் டாக்டர் நாயர் சாலையில், பெருமாள் செட்டிநாடு ஹோட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, கடையை மூடும் தருவாயில், மது போதையில் வந்த நபர், வெங்காயம், முட்டை கோஸ் இன்றி, ப்ரைட் ரைஸ் கேட்டு சப்ளையர் கோபி என்பவரிடம் வாக்குவாதம் செய்தார்.
பின், அங்கிருந்த சென்ற நபர், சிறிது நேரத்தில் 10 பேருடன் திரும்ப வந்த கடை உரிமையாளர் பன்னீர் செல்வத்திடம் தகராறு செய்தார். பின், தான் எடுத்து வந்த மண் அள்ளும் சவுலால், பன்னீர் செல்வத்தின் தலையில் தாக்கினார்.
இதில், காயமடைந்த பன்னீர் செல்வம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது வலது தலையில் தையல்கள் போடப்பட்டன.
இது குறித்து புகாரையடுத்து, பாண்டி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.