/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் குழாய் உடைப்பே பள்ளத்திற்கு காரணம் சீரமைப்பு முடியாததால் நெரிசல் தொடர வாய்ப்பு மேலும் ஆய்வு மேற்கொள்ள வாரியம் திட்டம்

ADDED : மே 19, 2025 01:21 AM

சென்னை:சென்னை மாநகராட்சியின், தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், 2,000 மி.மீ., விட்டம் உடைய சிமென்ட் குழாய் வழியாக, ஓ.எம்.ஆரில் உள்ள கழிவுநீரேற்று நிலையம் செல்கிறது. அங்கிருந்து, பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதற்காக, 25 ஆண்டுகளுக்கு முன், மயிலாப்பூரில் இருந்து ஓ.எம்.ஆர்., வழியாக, 15 அடி ஆழம், 2,000 மி.மீ., விட்டம் உடைய குழாய் பதிக்கப்பட்டது. இந்த குழாயைச் சுற்றி கட்டப்பட்ட கான்கிரீட் கட்டுமானத்தில் இடைவெளி இருந்துள்ளது.
இந்நிலையில், குழாயில் அதிக அழுத்தம் காரணமாக திடீரென விரிசல் ஏற்பட்டு, நேற்று முன்தினம், தரமணி டைடல் பார்க் சந்திப்பில் சாலை உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டது.
அவ்வழியே வந்த கார், இப்பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணித்த ஓட்டுநர் உட்பட ஐந்து பேர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதையடுத்து, பள்ளம் விழுந்த பகுதியை சீரமைக்கும் பணியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
இரவு, பகலாக சீரமைப்பு பணி நடக்கிறது. நாளை - இன்று - வாகன போக்குவரத்து சீராக செல்லும் வகையில், பணியை வேகப்படுத்தி உள்ளோம்.
இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், ஒரு நாள் தாமதம் ஆகும். இந்த குழாய் செல்லும் பகுதியில், வேறு இடங்களில் இதுபோன்ற பிரச்னை ஏதும் உள்ளதா என, ஆய்வு செய்ய உள்ளோம்.
குழாய் பதித்துள்ள பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. அந்த பணியால், குழாய் சேதமடையாமல் இருக்கவும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.