/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜனங்களின் உள்ளங்களை நிறைத்த சிறார்களின் 'ஜனாபாய்' நாடகம்
/
ஜனங்களின் உள்ளங்களை நிறைத்த சிறார்களின் 'ஜனாபாய்' நாடகம்
ஜனங்களின் உள்ளங்களை நிறைத்த சிறார்களின் 'ஜனாபாய்' நாடகம்
ஜனங்களின் உள்ளங்களை நிறைத்த சிறார்களின் 'ஜனாபாய்' நாடகம்
ADDED : ஆக 17, 2025 12:59 AM

சென்னை,கிருஷ்ணரின் அவதாரமான விட்டல பாண்டுரங்கனின் பக்தர்களில் முக்கியமானவர் ஜனாபாய். இவர், பாண்டுரங்கன் மீது கொண்ட அதீத பக்தியை மையமாக வைத்து, 'ஜனாபாய்' எனும் நாடகம், மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் சார்பில் நேற்று முன்தினம் நடந்தது.
சிறு வயதிலே, தன் பெற்றோரை இழந்த ஜனாபாய், தன் குருவான ஞானி ராம்தேவ் வீட்டில் அடைக்கலமாகிறார். அங்கு அவருக்கு ஏராளமான இடையூறு நேர்கிறது. எனினும் பாடுவது உள்ளிட்ட திறமை மிகுந்தவராக வளர்கிறார்; விட்டல பாண்டுரங்கன் மீது பக்தி மயமாகவும் இருக்கிறார்.
வீட்டில், ஜனாபாய்க்கு வேலை பளு அதிகமாக தரப்படுகிறது. அதையெல்லாம் அவர் எளிதாக முடிக்கிறார். யார் கண்களுக்கும் தெரியாமல், ஜனாபாய்க்கு மட்டும் விட்டல பாண்டுரங்கன் காட்சி தருவதோடு, அவருக்கு உதவியும் செய்கிறார்.
ஜனாபாய், அவ்வப்போது தனியாக பேசி சிரிக்கிறார். அதை பார்த்து பலரும் கேலி செய்கின்றனர். அதற்கு ஜனாபாய், 'நான் பாண்டுரங்கனுடன் உரையாடுகிறேன்' என கூறுவதை கேட்டு, பலரும் அவரை பைத்தியம் என்கின்றனர்.
ஒருகட்டத்தில் பாண்டுரங்கனின் கோவிலில் இருந்து நகைகள் திருடுபோகின்றன. அந்த பழி, ஜனாபாய் மீது விழுகிறது. ஊரே அவரை கட்டி வைத்து இம்சிக்கும்போது, அனைவரும் முன்னும் பாண்டுரங்கன் தோன்றி, ஜனாபாயின் பக்தியை மெச்சுவதோடு நாடகம் முடிகிறது.
கிருஷ்ண கலா மந்திரம் அமைப்பு சார்பில், கீதா நாராயணன் எழுதி, நாடகத்தை இயக்க, பாடல் வரிகள் மற்றும் இசையை, கிரிதரன் வழங்கினார்.
நாடகத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும், தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர். நாடகம் முழுதும் 3 முதல், 15 வயது வரையுள்ள சிறார்கள், மிகுந்த ஈடுபாடுடன் நடித்தும், கோர்வையான வசனங்களை பேசியும், ரசிகர்களின் மனதில் நிலைத்தனர்.
கிருஷ்ணனின் தசாவதாரங்களும் இடம் பெறும் வகையில், நடனத்துடன் கூடிய பாடல் காட்சி ஜனங்களின் உள்ளங்களை நிறைத்தது. இந்த நாடகம், இன்று மாலை 7:00 மணிக்கு, மீண்டும் நடக்கவிருக்கிறது. அனைவரும் இலவசமாக காணலாம்.
b3