/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயனற்ற வடிகாலை இடித்து கட்ட முடிவு செலவை ஏற்கிறது ஒப்பந்த நிறுவனம்
/
பயனற்ற வடிகாலை இடித்து கட்ட முடிவு செலவை ஏற்கிறது ஒப்பந்த நிறுவனம்
பயனற்ற வடிகாலை இடித்து கட்ட முடிவு செலவை ஏற்கிறது ஒப்பந்த நிறுவனம்
பயனற்ற வடிகாலை இடித்து கட்ட முடிவு செலவை ஏற்கிறது ஒப்பந்த நிறுவனம்
ADDED : செப் 22, 2024 06:48 AM
துரைப்பாக்கம்: சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஓ.எம்.ஆர்., மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள நீர்வழிபாதையில் இருந்து வடியும் மழைநீர், சதுப்பு நிலத்தில் சேரும் வகையில் உள்ள பழைய வடிகாலை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குமுன், வி.பி.ஜி., அவென்யூ சாலைகள் வழியாக, ஒரு கோடி ரூபாயில், 900 மீட்டர் நீளம், 4 அடி அகலத்தில் வடிகால் கட்டப்பட்டது. இந்த வடிகால் ஓ.எம்.ஆரில் இருந்து துவங்கி சதுப்பு நிலத்தில் முடியவேண்டும். மாறாக, சதுப்பு நிலத்தில் இருந்து ஓ.எம்.ஆரில் முடியும் வகையில் கட்டப்பட்டது.
இதில், ஓ.எம்.ஆர்., நீர்வழிபாதையில் இருந்து வடிகால், 1 அடி உயரத்தில் அமைந்தது. இதை ஆய்வு செய்த, சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள், 'இந்த வடிகாலில் மழைநீர் செல்லாது. நீர்வாட்டம் இல்லாததால், மேட்டுக்குப்பம் ராஜிவ்நகர் முதல் வி.ஏ.ஓ., அலுவலகம் வரை, ஓ.எம்.ஆரில் வெள்ள பாதிப்பு ஏற்படும்' என கூறினர்.
இதனால், கட்டிய வடிகால் எந்த பயனும் இல்லை என முடிவு செய்தனர். நீரோட்டம் பார்த்து கட்டாத வடிகாலுக்காக செலவு செய்த ஒரு கோடி ரூபாய் யார் கணக்கில் சேரும் என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர், மண்டல அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். மேல் அதிகாரிகள் கள ஆய்வும் செய்தனர்.
கடந்த 19ம் தேதி நடந்த சோழிங்கநல்லுார் மண்டல கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர் ஏகாம்பரம், தினமலர் நாளிதழை சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டார். மண்டல அதிகாரி ராஜசேகர், ''குறிப்பிட்ட துாரத்தை உடைத்து, நீரோட்டம் பார்த்து, வடிகாலில் மறு கட்டமைப்பு அமைக்கப்படும். இதற்கான செலவை, கவிதாவேலன் என்ற ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்,'' என, கூறினார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வடிகாலில் நடந்த தவறை சரி செய்ய, தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் மீண்டும் நீரோட்டம் பார்க்க உள்ளோம். ஓ.எம்.ஆரில் தேங்கும் மழைநீர், சதுப்பு நிலம் செல்லும் வகையில் வடிகால் கட்டமைப்பில் மாற்றம் செய்ய ஒப்பந்த நிறுவனத்திடம் கூறி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.