/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாரின் கோரிக்கையை ஏற்று சாலையை சீரமைத்த மாநகராட்சி
/
போலீசாரின் கோரிக்கையை ஏற்று சாலையை சீரமைத்த மாநகராட்சி
போலீசாரின் கோரிக்கையை ஏற்று சாலையை சீரமைத்த மாநகராட்சி
போலீசாரின் கோரிக்கையை ஏற்று சாலையை சீரமைத்த மாநகராட்சி
ADDED : ஜூன் 09, 2025 02:21 AM

சென்னை:சென்னையில் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்காக, மின் வாரியம் மற்றும் குடிநீர் வாரியம் போன்றவற்றால், சாலைகள் ஆங்காங்கே தோண்டப்படுகின்றன.
ஆனால், பணி முடிந்த பின், சேதப்படுத்தப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படுவதில்லை. அதனால், அச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சில சமயங்களில் விபத்தில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
எனவே, ஒவ்வொரு போக்குவரத்து இன்ஸ்பெக்டரும், தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்து ஏற்படுத்தும் வகையில் பள்ளம் இருந்தால், மாநகராட்சிக்கோ அல்லது நெடுஞ்சாலை துறைக்கோ கடிதம் எழுதி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும், விபத்து ஏற்படும் வகையில் உள்ள சாலைகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.
குறிப்பாக, கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட, 140வது வார்டு கோவிந்தன் சாலையில், நான்கு இடங்களில் விபத்து ஏற்படும் வகையில் பள்ளம் இருந்தது.
அவற்றை விரைந்து சீரமைக்க, போக்குவரத்து போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு, அந்த சாலையில் இருந்த பள்ளங்கள் சீரமைக்கப்பட்டன. அதனால், நேற்று கோவிந்தன் சாலையில் எந்தவித பாதிப்பும் இன்றி, போக்குவரத்து சீரானது.