/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3.050 கோடி வெள்ள தடுப்பு பணிகள் ஆகஸ்டில் முடியும் என்கிறது மாநகராட்சி
/
ரூ.3.050 கோடி வெள்ள தடுப்பு பணிகள் ஆகஸ்டில் முடியும் என்கிறது மாநகராட்சி
ரூ.3.050 கோடி வெள்ள தடுப்பு பணிகள் ஆகஸ்டில் முடியும் என்கிறது மாநகராட்சி
ரூ.3.050 கோடி வெள்ள தடுப்பு பணிகள் ஆகஸ்டில் முடியும் என்கிறது மாநகராட்சி
ADDED : மே 27, 2025 12:33 AM
சென்னை ''கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில், 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள், வரும் ஆகஸ்டில் முடிக்கப்படும்,'' என, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
வடகிழக்கு பருவ மழைக்காலத்தில், சென்னை கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு, நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்காக, 3,050 கோடி ரூபாயில் கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
மொத்தம், 46 தொகுப்புகளாக பணிகள் பிரிக்கப்பட்டு, 30 தொகுப்பு பணிகள் முடிந்துள்ளன; 16 தொகுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்கப்படும்.
பட்டாளம், டிமெல்லஸ் சாலை ஆகிய இடங்களில், மழைக்காலங்களில் வெள்ளநீர் அதிகம் தேங்குகிறது. இங்கு கூடுதலாக, 17 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் நடக்கின்றன.
கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில், மழைநீர் கால்வாய் கட்டும் பணிக்கு, நகர்புற நிதி பத்திரம் வாயிலாக, 200 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது.
பிராட்வேயில், 820 கோடி ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, மாநகராட்சி பங்களிப்பாக, 520 கோடி ரூபாய் தர வேண்டும்.
வங்கிகளைவிட வட்டி விகிதம் குறைவாக கிடைப்பதால், நகர்ப்புற நிதி பத்திரங்கள் வாயிலாக, பிராட்வே திட்டத்திற்கும் நிதி பெற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு குமரகுருபரன் கூறினார்.
***