/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கே.கே.நகர் ஆக்கிரமிப்புகளை 'அலேக்'காக துாக்கிய மாநகராட்சி
/
கே.கே.நகர் ஆக்கிரமிப்புகளை 'அலேக்'காக துாக்கிய மாநகராட்சி
கே.கே.நகர் ஆக்கிரமிப்புகளை 'அலேக்'காக துாக்கிய மாநகராட்சி
கே.கே.நகர் ஆக்கிரமிப்புகளை 'அலேக்'காக துாக்கிய மாநகராட்சி
ADDED : ஜன 28, 2026 05:50 AM

கே.கே.நகர்: கே.கே.நகரில் பிரதான சாலைகளில் நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக நேற்று அகற்றினர்.
கோடம்பாக்கம் மண்டலம், கே.கே.நகர் 136வது வார்டில் உள்ள பிரதான சாலைகளில், நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலைமை உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து, கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, அண்ணா பிரதான சாலை, பி.டி.ராஜன் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில், நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதில், 'பாப்கேட்' இயந்திரம் உதவியுடன் 20க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி டிபன் கடைகள், பானிபூரி கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. அப்போது, வியாபாரிகள் மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

