sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை பிரதான சாலையில் திரியும் மாடுகளால் அச்சம்

/

மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை பிரதான சாலையில் திரியும் மாடுகளால் அச்சம்

மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை பிரதான சாலையில் திரியும் மாடுகளால் அச்சம்

மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை பிரதான சாலையில் திரியும் மாடுகளால் அச்சம்


ADDED : மே 18, 2025 03:12 AM

Google News

ADDED : மே 18, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்குடி மண்டல எல்லைக்கு உட்பட்ட மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் உள்ளனர். நுாற்றுக்கணக்கான மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

அவை, போக்குவரத்துக்கு இடையூறாக பிரதான சாலைகளில் சுற்றி திரிவதாக, ஏராளமான புகார்கள் சென்றன.

சாலையில் மாடுகளை திரியவிட்டால், மாடுகள் பிடிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டது. ஆனால், அந்த எச்சரிக்கையை கால்நடை வளர்ப்போர் கண்டுகொள்ளவே இல்லை.

கடந்த ஆண்டு, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி பகுதியில், சிறுமியை மாடு முட்டி புரட்டி எடுத்தது. அதை தொடர்ந்து, நங்கநல்லுார் பகுதியில், மாடு முட்டி இரு பெண்கள் படுகாயமடைந்தனர்.

பழவந்தாங்கலை சேர்ந்த கண்ணன் என்பவர், மாடு முட்டி வயிறு கிழிந்து சிகிச்சை பெற்றார். திருவல்லிக்கேணியில் மாடு முட்டி, டி.பி.கோவில் தெருவை சேர்ந்த சுந்தரம் என்பவர் பலியானார். மேலும், மூவர் காயமடைந்தனர்.

அதேபோல, நங்கநல்லுார், எஸ்.பி.ஐ., காலனி பிரதான சாலையை சேர்ந்த சந்திரசேகர், மாடு முட்டி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து, மாடுகளை சாலையில் திரியவிட்டால், முதல் முறை 5,000, இரண்டாம் முறை 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. பின், சில நாட்கள் மட்டுமே நடவடிக்கை எடுத்தது.

பின், வழக்கம்போல கண்டுகொள்ளாமல் விட்டதால், மீண்டும் மாடுகள் சாலையில் உலா வந்து, அங்கேயே தஞ்சமடைகின்றன.

வேளச்சேரி- - தாம்பரம் பிரதான சாலையில், கைவேலி, பாலாஜி நகர், பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஆகிய பகுதிகளில், இரவு நேரத்தில் அதிக அளவில் மாடுகள் சாலையில் தஞ்சமடைந்து வருகின்றன.

அவற்றால் இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

மீண்டும் ஒரு உயிரிழப்பு நிகழும் முன், இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும், சம்பந்தப்பட்ட மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- -நமது நிருபர்- -






      Dinamalar
      Follow us