/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோடிகள் செலவிட்டும் நீரோட்டம் பாதிப்பு
/
கோடிகள் செலவிட்டும் நீரோட்டம் பாதிப்பு
ADDED : அக் 21, 2025 11:51 PM

புழுதிவாக்கம்: பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்கு, உள்ளகரம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளின் மழைநீரை வெளியேற்றும் முக்கியமான வீராங்கால் ஓடை அமைந்துள்ளது.
மழைக்கால முன்னெச்சரிக்கையாக, உள்ளகரம் - கைவேலி வரை துார்வார 28 லட்சமும், வீராங்கால் ஓடை தடுப்பு சுவரை உயர்த்த குறிப்பிட்ட துாரத்திற்கு 7 கோடி ரூபாயும், மாநகராட்சி சார்பில் செலவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் சீனிவாசன் கூறியதாவது:
வீராங்கால் ஓடையில், காய்ந்த கிளைகள் மற்றும் சுவர் கட்டுமான கழிவுகளை முழுமையாக அகற்றாமல், சில இடங்களில் ஓடையிலேயே கிடக்கின்றன.
இதனால், மழைநீர் செல்லாமல் தடைபட்டுள்ளதால், பருவமழை காலத்தில் மழைநீர் ஓட்டம் தடைபடுவது அதிகரித்து, வீடுகளை வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது.
எனவே, இதை சீர் செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.