/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியும் மாநகராட்சியில் தீராத குப்பை பிரச்னை கவுன்சிலர்கள் புலம்பல்
/
தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியும் மாநகராட்சியில் தீராத குப்பை பிரச்னை கவுன்சிலர்கள் புலம்பல்
தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியும் மாநகராட்சியில் தீராத குப்பை பிரச்னை கவுன்சிலர்கள் புலம்பல்
தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியும் மாநகராட்சியில் தீராத குப்பை பிரச்னை கவுன்சிலர்கள் புலம்பல்
ADDED : மார் 07, 2024 12:49 AM
பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும், தனித்தனி ஒப்பந்ததாரர்கள் வாயிலாக குப்பை சேகரிக்கப்பட்டு வந்தது.
இப்பணி முறையாக நடப்பதில்லை என, தொடர்ந்து புகார் எழுந்ததை அடுத்து, ஐந்து மண்டலங்களிலும், குப்பை சேகரிக்கும் பணி, 'அவர்லேண்ட்' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அந்நிறுவனம், 1வது மண்டலத்தில் - 320; 2 - 322; 3 - 290; 4 - 385; 5 - 304 என்ற கணக்கில் மொத்தம் 1,621 ஊழியர்களை நியமித்து, குப்பை அகற்றும் பணியை தினமும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பல்லாவரம் பகுதியில் சில வாரங்களாக முறையாக குப்பை எடுப்பதில்லை என, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வார்டுக்கும், நிர்ணயிக்கப்பட்ட ஊழியர்களைவிட குறைவான ஊழியர்களே வருவதால், அனைத்து வீடுகளிலும், குப்பை அகற்ற முடியவில்லை. சில வீடுகளில் மட்டும் எடுத்து பல வீடுகளை கண்டுகொள்வதில்லை என, குற்றச்சாட்டு எழுகிறது.
இதனால், குப்பை தேங்கி கிடங்கும் பகுதிகளில், பொதுமக்களிடம் பதில் கூற முடியவில்லை என, கவுன்சிலர்கள் புலம்புகின்றனர். இப்பிரச்னையில், மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, ஒவ்வொரு வார்டிலும் நிர்ணயிக்கப்பட்ட ஊழியர்களை முறையாக பணியில் ஈடுபடுத்தி, அனைத்து வீடுகளிலும் குப்பை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஒப்பந்த தனியார் நிறுவனம் கூறுகையில், 'பம்மல் விஸ்வேசபுரம், கன்னடப்பாளையம், மாடம்பாக்கம் ஆகிய இடங்களில், ஏற்கனவே தேங்கியுள்ள குப்பையை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால், இரண்டு நாட்களாக இப்பிரச்னை ஏற்பட்டது. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்' என கூறியது.

