/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்டான்லியில் டைல்ஸ் ஒட்டும் பணி நோயாளிகளுக்கு நேர்ந்த கொடுமை
/
ஸ்டான்லியில் டைல்ஸ் ஒட்டும் பணி நோயாளிகளுக்கு நேர்ந்த கொடுமை
ஸ்டான்லியில் டைல்ஸ் ஒட்டும் பணி நோயாளிகளுக்கு நேர்ந்த கொடுமை
ஸ்டான்லியில் டைல்ஸ் ஒட்டும் பணி நோயாளிகளுக்கு நேர்ந்த கொடுமை
ADDED : மார் 27, 2025 12:16 AM

ராயபுரம், ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை, 'எச் - பிளாக்' முதல் தளத்தில், மூளை நரம்பியல் பிரிவு அறுவை சிகிச்சை பிரிவு உள்ளது. இங்குள்ள, ஆண்கள் வார்டில் 50க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வார்டில், டைல்ஸ் ஒட்டும் பணி நடக்கிறது. ஆனால், நோயாளிகளை வேறு வார்டிற்கு மாற்றாமல், பணிகள் ஜரூராக நடக்கின்றன.
டைல்ஸ் ஒட்டும் பணிக்காக, நேற்று தளத்தை டிரில்லிங் இயந்திரத்தால் உடைக்கும் பணி நடந்தது. இதனால், வார்டு புகை முழுதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை.
நோயாளிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்காமல், கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக நிர்வாகத்தினர் மீது நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.