ADDED : ஆக 10, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ரயிலில் அடிபட்டு இறந்தவர் அடையாளம், 10 நாட்களுக்கு பின் தெரிய வந்தது.
அண்ணனுார் ரயில்வே மேம்பாலம் அருகே, கடந்த 31ம் தேதி, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
இது குறித்து, ஆவடி ரயில்வே போலீசார் விசாரித்தனர். இதற்கிடையே, ஆவடியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், 'உறவினர் மகனை காணவில்லை' என, பல்வேறு இடங்களில் தேடி வந்தார்.
அண்ணனுார் அருகே ரயிலில் அடிபட்டு இறந்தது, செல்வராஜ் உறவினர் மகனான, துாத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியைச் சேர்ந்த முத்துராஜ், 19, என்பது 10 நாட்களுக்கு பின், நேற்று தெரிய வந்தது.
விசாரணையில், அயப்பாக்கம் பகுதியில் இரும்பு கடையில் பணி புரிந்து வந்த முத்துராஜ், சம்பவத்தன்று அண்ணனுார் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது.