/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால் பணியை விரைந்து துவங்க புழுதிவாக்கம் மக்கள் கோரிக்கை
/
வடிகால் பணியை விரைந்து துவங்க புழுதிவாக்கம் மக்கள் கோரிக்கை
வடிகால் பணியை விரைந்து துவங்க புழுதிவாக்கம் மக்கள் கோரிக்கை
வடிகால் பணியை விரைந்து துவங்க புழுதிவாக்கம் மக்கள் கோரிக்கை
ADDED : பிப் 07, 2024 12:49 AM
புழுதிவாக்கம், புழுதிவாக்கத்தில், பல தெருக்களில், மழைநீர் வடிகால் பணிகள் துவங்கவில்லை. இதனால், அப்பகுதி மக்கள், தங்கள் தெருவில் விரைந்து வடிகால் பணிகளை துவங்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி, வார்டு 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம், இங்கு பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள ஜி.கே.அவன்யூ, டி.ஆர்.பாலு தெரு, மந்தைவெளி தெரு மற்றும் கணேஷ் நகர் உள்ளிட்ட பல தெருக்களில், மழைநீர் வடிகால் பணி இன்னும் துவங்கவில்லை.
புழுதிவாக்கத்தில் உள்ள அனைத்து வடிகால்களில் சேரும் மழைநீர் இறுதியாக வீராங்கல் ஓடைக்கு சென்று, அங்கிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்று, ஒக்கியம்மடு வழியாக கடலில் கலக்கிறது.
இங்குள்ள பெரும்பாலான தெருக்களில் 20 ஆண்டுக்கு முன், 1.5 அடி அகலத்தில் கட்டப்பட்ட பழைய மழைநீர் வடிகால்களே தற்போதும் பயன்பாட்டில் உள்ளன. போதிய பராமரிப்பின்றி, சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த வடிகால்களை அகற்றி, புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
இது குறித்து பகுதி மக்கள் கூறியதாவது:
மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதாலேயே, புழுதிவாக்கத்தின் பல தெருக்கள் மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் மூழ்கின.
மந்தைவெளி தெருவிலிருந்து வரும் மழைநீர், ஜி.கே.அவன்யூ, டி.ஆர்.பாலு தெருவில் உள்ள 1.5 அடி அகலம் உடைய, பழைய மழைநீர் வடிகால் வழியாக, பாலாஜி நகர் விரிவு, வில்லேஜ் சாலையில் உள்ள வடிகாலை வந்தடைந்து, பின்னர், பாலாஜி நகர் விரிவு, 24 தெரு வழியாக வீராங்கல் ஓடையில் கலக்கிறது.
மேற்கண்ட தெருவில் உள்ள பழைய வடிகால் அனைத்தையும் அகற்றி, புதிய வடிகால் அமைத்திட வேண்டும். தவிர, கணேஷ் நகரில் உள்ள பழைய வடிகால் அனைத்தும் திறந்த நிலையில், தாழ்வான உயரத்தில், சுகாதாரக் கேட்டுடன் உள்ளன. இவை மழைநீரை வெளியேற்றும் திறனை இழந்து விட்டன.
குறிப்பாக, கணேஷ்நகர் 3வது தெரு முதல் 8வது தெரு வரை, தற்போதைய வடிவமைப்புக்கு ஏற்ப, புதிய மழைநீர் வடிகால் அமைத்தால் மட்டுமே, மழைக் காலங்களில் இத் தெருக்களில் நீர் தேங்காது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், புழுதிவாக்கத்தின் 80க்கும் மேற்பட்ட தெருக்களில், இன்னும் துவங்கப்படாமல் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை உடனே துவங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

