ADDED : அக் 10, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி, வேளச்சேரி, உதயம்நகரை சேர்ந்தவர் முருகேசன், 55. சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர்.
நேற்று, வேளச்சேரியில் இருந்து கிண்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். கிண்டி, நேருநகர் சாலை பள்ளத்தில் சிக்காமல் இருக்க, திடீரென பிரேக் பிடித்தார். அப்போது, தவறி விழுந்த முருகேசன், பின்னால் வந்த மாநகர பஸ்சில் சிக்கி பலியானார்.

