/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் நிதியில் கல்லுாரிகளை கட்டலாம் அறநிலையத்துறை சட்டம் சொல்கிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
/
கோவில் நிதியில் கல்லுாரிகளை கட்டலாம் அறநிலையத்துறை சட்டம் சொல்கிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
கோவில் நிதியில் கல்லுாரிகளை கட்டலாம் அறநிலையத்துறை சட்டம் சொல்கிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
கோவில் நிதியில் கல்லுாரிகளை கட்டலாம் அறநிலையத்துறை சட்டம் சொல்கிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
ADDED : ஜூலை 11, 2025 11:33 AM

சென்னை: சென்னையில் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படும் 25 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லுாரி, ஒன்பது கலை - அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் வகுப்பறைகள், ஆய்வரங்கங்கள் என 132 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை சார்பில், 10 கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்து, பல தடைகளை தாண்டி செயல்படுத்தியுள்ளோம்.
வறுமை கோட்டிற்கு கீழே இருக்கக்கூடியவர்கள் தான், இந்த கல்லூரியில் பயன் பெறுகின்றனர். கோவில் நிதியில் கல்லுாரிகளை தொடங்கலாம் என ஹிந்து அறநிலையத்துறை சட்டமே சொல்கிறது. அந்த வகையில் தான் நான்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆந்திரா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் இதுபோன்றுகல்லூரிகள், பல்கலைகள் செயல்படுகின்றன.
உடற்பிணி நீக்கும் மருத்துவமனையை 19 கோவில்களில் கொண்டு வந்திருக்கிறோம். பசிப்பிணி, அறிவுப்பிணி, உடற்பிணி ஒரு சேர நீக்குவது தான் இறைவனின் அம்சம். சோழர் காலத்தில் கூட மிகப்பெரிய கல்விச் சோலை இருந்து11 பாடப்பிரிவுகள் இடம் பெற்றிருந்ததாககல்வெட்டு கூறுகிறது. கடந்த 1966ல், சென்னை மாகாணஅட்வகேட் ஜெனரல் சி.பி.ராமசாமி தலைமையில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தந்த அறிக்கையில், கல்வி நிலையங்களை தோற்றுவிக்க வேண்டும் என கூறியிருந்தது. இந்த ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவும் பா.ஜ., மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முரணான வார்த்தைகளை பேசியிருக்கிறார்.
கடந்த 2014ல், அ.தி.மு.க., ஆட்சியில், பழனி ஆண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியில் கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்துள்ளனர். கடந்த ஆட்சிக் காலங்களிலேயே ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில், பல பள்ளிகள் கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. வரலாறு தெரியாமல் தமிழக கோவில்கள், அறநிலையத்துறையில் இருந்து விடுபட வேண்டும் என பா.ஜ.,வுக்கு ஊதுகுழலாக பழனிசாமி பேசுவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.