/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் முதன்முதலாக மாநகராட்சி பூங்காவில் நுாலகம்
/
சென்னையில் முதன்முதலாக மாநகராட்சி பூங்காவில் நுாலகம்
சென்னையில் முதன்முதலாக மாநகராட்சி பூங்காவில் நுாலகம்
சென்னையில் முதன்முதலாக மாநகராட்சி பூங்காவில் நுாலகம்
ADDED : பிப் 15, 2024 12:22 AM

ராயபுரம்,சென்னை மாநகராட்சி பூங்காவில், முதன்முதலாக 'வாசிக்கலாமா சென்னை' என்ற பெயரில் நுாலகம் திறக்கப்பட்டுள்ளது.
ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சூளை, ராகவேந்திரா பூங்காவில், வடசென்னை வடக்கு வட்டார துணை கமிஷனர் ரவிதேஜா, ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் சொக்கலிங்கம், ராயபுரம் மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு, கவுன்சிலர் ராஜேஸ்வரி ஆகியோர், நுாலகத்தை திறந்து வைத்தனர். பூங்காவில் தற்போது, 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரவேற்பைப் பொறுத்து, மேலும் புத்தகங்கள் மற்றும் தினசரி நாளிதழ்கள் வாங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் சொக்கலிங்கம் கூறியதாவது:
ராகவேந்திரா பூங்காவில் மாநகராட்சி நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுாலகம் பூங்கா பராமரிப்பாளர் கட்டுப்பாட்டில் இயங்கும்.
பொதுமக்கள், பெயர் பதிவு செய்து புத்தகங்களை வாங்கி படித்து, வைத்து விடலாம். பூங்கா செயல்படும் நேரங்களில் இந்த நுாலகம் செயல்படும். மேலும், பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வோர் அமைப்பைச் சேர்ந்தவர்களை, நுாலகம் பராமரிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நுாலகத்தில் தேசியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், நாவல்கள், வரலாற்று புத்தகங்கள், திருக்குறள், கதைகள், கவிதை புத்தகங்கள், பொழுதுபோக்கு புத்தகங்கள் என, 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதன் வெற்றியைப் பொறுத்து, விரைவில் மற்ற மண்டலங்களில் உள்ள பூங்காக்களிலும் 'வாசிக்கலாமா சென்னை' நுாலகம் அமைக்கும் பணிகள், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

