ADDED : ஜன 29, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொருக்குப்பேட்டை:கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகரில் 49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், உடற்பயிற்சிக் கூடம் அங்கன்வாடி மையம் மற்றும் விளையாட்டுத்திடல் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
அதேபோல் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட, 47வது வார்டு, கொருக்குப்பேட்டை, மீனம்பாள் நகரில் வடசென்னை எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நேற்று புதிய பல்நோக்கு மைய கட்டட கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.