/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடிக்கடி தீ பற்றும் குப்பை மலை ஒரு மாதமாக திணறும் படப்பை
/
அடிக்கடி தீ பற்றும் குப்பை மலை ஒரு மாதமாக திணறும் படப்பை
அடிக்கடி தீ பற்றும் குப்பை மலை ஒரு மாதமாக திணறும் படப்பை
அடிக்கடி தீ பற்றும் குப்பை மலை ஒரு மாதமாக திணறும் படப்பை
ADDED : ஏப் 17, 2025 11:40 PM

படப்பை, குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில், 20,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில், தினமும் சேகரமாகும் குப்பை, படப்பை- - புஷ்பகிரி சாலையில் மலை போல் கொட்டிக் குவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் அதிகம் கொட்டப்படுவதால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
படப்பை ஊராட்சியில் குப்பை அகற்றும் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தனியார் தொழிற்சாலை நிதி உதவியுடன், குப்பையை அழிக்க, 61 லட்சம் ரூபாய் மதிப்பில், காந்த வெப்ப சிதைவு இயந்திர கூடம் கடந்த 2022ம் ஆண்டு திறக்கப்பட்டும், பயன்பாடின்றி உள்ளது.
இதனால், குப்பை கிடங்கில் நாளுக்கு நாள் குப்பையின் அளவு மலை போல் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இந்த குப்பையை அழிக்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது.
குப்பையில் இருந்து வெளியேறும் புகை, குடியிருப்பு பகுதியை சூழ்வதால், படப்பை மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், குப்பை கிடங்கில் வைக்கப்பட்ட தீ அணைக்கப்படாததால், ஒரு மாதத்திற்கும் மேலாக புகை வெளியேறியபடி உள்ளது.
இதனால், குப்பை கிடங்கை சுற்றியுள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் ஆபத்து உள்ளது. காந்த வெப்ப சிதைவு இயந்திரம் பயன்படுத்தி, குப்பையை முறையாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.