/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்ணீர் கேட்பதுபோல் நடித்து சிறுமியை தாக்கி பலாத்காரம்
/
தண்ணீர் கேட்பதுபோல் நடித்து சிறுமியை தாக்கி பலாத்காரம்
தண்ணீர் கேட்பதுபோல் நடித்து சிறுமியை தாக்கி பலாத்காரம்
தண்ணீர் கேட்பதுபோல் நடித்து சிறுமியை தாக்கி பலாத்காரம்
ADDED : அக் 27, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
பள்ளிக்கரணை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத நபர், சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
சமையல் அறையில் தண்ணீர் எடுக்க சென்றபோது, அந்த நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சத்தம் போட்டு தப்பிக்க முயன்ற சிறுமியின் வாயை பொத்தி, தலையை சுவற்றில் இடித்ததில் சிறுமி மயக்கம் அடைந்துள்ளார்.
பின், கதவை உள்தாழ்ப்பாள் போட்டு, பாலியல் வன்கொடுமை செய்து, மர்ம நபர் தப்பி சென்றுள்ளார். சிறுமியின் தாய் சென்று பார்த்தபோது, நடந்த சம்பவம் தெரிந்தது. கண்ணகி நகர் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.