/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலாற்றை பாதுகாக்க அரசுக்கு அக்கறையில்லை: அன்புமணி
/
பாலாற்றை பாதுகாக்க அரசுக்கு அக்கறையில்லை: அன்புமணி
பாலாற்றை பாதுகாக்க அரசுக்கு அக்கறையில்லை: அன்புமணி
பாலாற்றை பாதுகாக்க அரசுக்கு அக்கறையில்லை: அன்புமணி
ADDED : ஆக 14, 2025 12:40 AM
சென்னை, 'தோல் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக செயல்படாமல், தமிழக அரசு பாலாற்றை பாதுகாக்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
ஒருங்கிணைந்த வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் செயல்படும் தோல் பொருள் தொழிற்சாலைகளை மூடக்கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'இயற்கை நம்மை சும்மா விடாது' என, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாலாற்றைக் காக்க உச்ச நீதிமன்றம் காட்டும் ஆர்வத்தில், ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட தமிழக அரசு காட்டாதது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
பாலாற்றை பாதுகாக்க 25 ஆண்டுகளுக்கும் மேலாக, உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை அளித்துள்ளது. ஆனாலும், அவற்றை செயல்படுத்தாமல், பாலாற்றை சீரழிக்கும் தோல் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது.
பாலாற்றை சீரழிக்கும் நிறுவனங்களிடமிருந்து, சீரழிவுகளை சரி செய்வதற்கான செலவுத் தொகையை வசூலிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை, தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
தமிழக அரசு இனியாவது தன் பொறுப்பை உணர்ந்து, திருந்தி, பாலாற்றை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.