/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராமர் - சீதா தேவி திருக்கல்யாணம் கோலாகலம்
/
ராமர் - சீதா தேவி திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED : ஏப் 07, 2025 03:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்:திருவொற்றியூர், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ராம நவமியையொட்டி, கோதண்டராமர் கர்ப்ப உத்சவம் நடந்து வருகிறது.
நிறைவு நாள் மற்றும் ராம நவமியான நேற்றிரவு, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ராமர்சந்திர பிரபு - சீதா தேவி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிமையாக நடந்தது. இதையடுத்து, பால், பழம் கொடுத்தல் நிகழ்வு, தேங்காய் உருட்டுதல் வைபவம் நிகழ்ந்தது.
தொடர்ந்து, ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளித்தார். பின், மாடவீதி உற்சவம் நடந்தது.

