/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலன் இறந்த துக்கம் உயிரை மாய்த்த காதலி
/
காதலன் இறந்த துக்கம் உயிரை மாய்த்த காதலி
ADDED : ஆக 29, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், கொடுங்கையூரில் காதலன் இறந்த துக்கத்தில், காதலி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர், தியாகி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சரோஜினி தேவி, 24; தனியார் நிறுவன ஊழியர். இவர் கல்லுாரியில் படிக்கும்போது சக மாணவரான திருவொற்றியூரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 24ம் தேதி உடல் நலக்குறைவால் பிரசாந்த் உயிரிழந்தார்.
இதனால், மன உளைச்சல் அடைந்த சரோஜினிதேவி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.