/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டிக்கு உதவி செய்த காவல் கரங்கள்
/
மூதாட்டிக்கு உதவி செய்த காவல் கரங்கள்
ADDED : பிப் 20, 2025 01:01 AM
சென்னை, டி.பி.,சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 80 வயது மூதாட்டி ஆதரவற்ற நிலையில் இருப்பதாக, காவல் கரங்கள் குழுவினருக்கு, 27ம் தேதி தகவல் கிடைத்தது.
இதையடுத்து மூதாட்டியை மீட்ட குழுவினர், முடிச்சூரில் உள்ள 'கை கொடுப்போம்' காப்பகத்தில் சேர்த்து, அவருக்கு தேவையான உதவியை வழங்கி வந்தனர்.
மீட்கப்பட்ட மூதாட்டி, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அபூர்வம்மாள், 78, என்பதும், ஞாபக மறதி காரணமாக, 26ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியவர் டி.பி.,சத்திம் பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.
மேலும், மூதாட்டி காணாமல் போனது தொடர்பாக அவர்களது உறவினர்கள் பேசின்பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது. காவல் கரங்கள் குழுவினர், குடும்பத்தினரை வரவழைத்து மூதாட்டியை ஒப்படைத்தனர். குழுவினரின் இப்பணிக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

