/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணிக்காத காருக்கு 'பாஸ்டேக்' வசூல் மன்னிப்பு கேட்டது நெடுஞ்சாலை ஆணையம்
/
பயணிக்காத காருக்கு 'பாஸ்டேக்' வசூல் மன்னிப்பு கேட்டது நெடுஞ்சாலை ஆணையம்
பயணிக்காத காருக்கு 'பாஸ்டேக்' வசூல் மன்னிப்பு கேட்டது நெடுஞ்சாலை ஆணையம்
பயணிக்காத காருக்கு 'பாஸ்டேக்' வசூல் மன்னிப்பு கேட்டது நெடுஞ்சாலை ஆணையம்
ADDED : நவ 08, 2024 12:27 AM
சென்னை, சாலையில் பயணிக்காத வாகனத்திற்கு சுங்க கட்டண வசூல் செய்ததற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மன்னிப்பு கோரியுள்ளது.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் அப்பாசாமி தாமோதரன். இவர் தன் காரை, அக்., 10ல் தன் வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார்.
அதே நாளில், செங்கல்பட்டு, பரனுார் சுங்கச்சாவடியை, அந்த கார் கடந்து சென்றதாக, 'பாஸ்டேக்' முறையில் வங்கி கணக்கில் இருந்து, 70 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது.
அதிர்ச்சியடைந்த அப்பாசாமி தாமோதரன், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, இ -- மெயில் வாயிலாகவும், மொபைல் போன் செயலி வாயிலாகவும் புகார் செய்தார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், பரனுார் சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, கார் கடந்து செல்லவில்லை. தவறுதலாக கட்டணம் வசூல் செய்யப்பட்டது தெரிந்தது.
தவறுக்கு மன்னிப்பு கோரி, அப்பாசாமி தாமோதரனுக்கு, பரனுார் சுங்கச்சாவடி மேலாளர் சூர்ய பிரகாஷ் மிஸ்ரா அனுப்பியுள்ள இ-மெயில் கடிதம்:
பரனுார் சுங்கச்சாவடியில் உள்ள, 'பாஸ்டேக் ரீடரில்' அன்றைய நாளில் பயணித்த ஒரு வாகனத்தின் பதிவெண்ணை கண்டறிய முடியவில்லை. எனவே, சுங்க கட்டண வசூல் ஊழியர், கணினியில் நேரடியாக வாகன பதிவெண்ணை கையால் உள்ளீடு செய்துள்ளார்.
அப்போது, மற்றொரு வாகனத்தின் எண்ணுக்கு பதிலாக, தங்கள் வாகனத்தின் பதிவெண் தவறுதலாக உள்ளீடு செய்யப்பட்டு, ஆன்லைனில் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மனித தவறு தான் இதற்கு காரணம். எழுத்து பிழை என்று ஒப்புக்கொள்கிறோம்.
மேலும், குறிப்பிட்ட வாகனத்திற்கு வசூல் செய்யப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டுஉள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பரனுார் சுங்கச்சாவடியில், 'ஆன்லைன்' பரிவர்த்தனைகளை செய்துள்ளோம்.
முதல் முறையாக இதுபோன்ற தவறு ஏற்பட்டுள்ளது. தயவு செய்து புகாரை வாபஸ் பெறுங்கள். இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடக்காது என்று உறுதியளிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.