/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேதமடைந்த பயணியர் நிழற்குடை அரும்பாக்கத்தில் அவதி
/
சேதமடைந்த பயணியர் நிழற்குடை அரும்பாக்கத்தில் அவதி
ADDED : செப் 27, 2024 12:40 AM

அரும்பாக்கம்,
இருக்கை வசதியில்லாத பயணியர் நிழற்குடையால், அரும்பாக்கம் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அரும்பாக்கம், 100 அடி சாலையில், அரும்பாக்கம் மெட்ரோ பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தில், அரும்பாக்கம் - கோயம்பேடை நோக்கிச் செல்லும் ஏராளமான மாநகர பேருந்துகள் நின்று செல்லும்.
அங்குள்ள பயணியர் நிழற்குடையில், ஒரு பகுதியில் சேதமடைந்தும், மற்றொரு பகுதியில் இருக்கை வசதியே கிடையாது. இதனால், நிறுத்ததை பயன்படுத்தும் பயணியர் கடும் அவதிப்படுகின்றனர்.
அதேபோல், நிழற்குடை சாய்ந்த நிலையில் இருப்பதால், பயணியர் அங்கு நிற்கவே அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.