/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவூர் கோவில் குளத்தை துார்வார வேண்டும்
/
கோவூர் கோவில் குளத்தை துார்வார வேண்டும்
ADDED : ஜன 16, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் அருகே கோவூரில், சித்தி விநாயகர் கோவில் பின்புறம் குளம் உள்ளது. இந்த குளம் பராமரிப்பின்றி உள்ளது.
குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக குளத்தில் கலக்கிறது. குளத்தை சுற்றி ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், குளத்தில் குப்பை கொட்டி மாசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குளம் முழுதும் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து, கொசு உற்பதியாகும் இடமாக மாறியுள்ளது. இந்த குளத்தை துார்வாரி பராமரிக்க வேண்டும்.
- என்.சதிஷ், கோவூர்.