/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சண்டையில் சட்டை கிழிந்ததால் வாலிபரை கொன்றவர் கைது
/
சண்டையில் சட்டை கிழிந்ததால் வாலிபரை கொன்றவர் கைது
ADDED : செப் 24, 2024 01:01 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 39. நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி சென்ற போது, மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சம்பவம் நடந்த ஓடிய மோப்ப நாய், புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த முத்து, 45, என்பவரின் வீட்டை சுற்றி வந்தது. இதையடுத்து, முத்துவிடம் விசாரித்ததில், முன்விரோதத்தால் சரவணனை வெட்டி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
போலீசார் கூறியதாவது:
சரவணனுக்கும், முத்துவுக்கும் இடையே மூன்று மாதங்களுக்கு முன், தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில், முத்துவின் சட்டை கிழிந்துள்ளது. இதில் ஏற்பட்ட விரோதத்தில், சரவணன் நடைபயிற்சி சென்ற போது அவரின் தலையில் கத்தியால் வெட்டி முத்து கொலை செய்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர். முத்துவை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.