/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
/
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : அக் 25, 2024 12:29 AM

வேளச்சேரி: வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, தேனாம்பேட்டையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, நேற்று முன்தினம், மர்ம நபர் ஒருவர் பேசினார்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், ரயில் நிலையத்தின் பல இடங்களில் சோதனை நடத்தியதில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிந்தது.
மிரட்டல் விடுத்த நபரின் மொபைல் போன் வாயிலாக, அவரது முகவரியை கண்டறிந்தனர். அவர், அரியலுார் மாவட்டம், திருமழபாடியைச் சேர்ந்த ஜோதிவேல், 62, என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அரியலுார் போலீசார் ஜோதிவேலை பிடித்தனர். விசாரணையில், தன் மனைவியை கொலை செய்த வழக்கில் சிறை சென்று வந்தவர் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.