ADDED : மார் 04, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை:துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம், 44; கொத்தனார். நீலாங்கரை, பாரதியார் நகரில் தங்கி பணிபுரிந்தார்.
நேற்று மதியம், வீட்டின் அருகே உள்ள காயலான் கடையில் பிளாஸ்டிக் பொருளை, மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு துண்டித்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக இயந்திரம், அவரது கழுத்தில் சிக்கி அறுத்ததில், சிதம்பரம் பலியானார். நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

