/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடிகால்வாய் போல மாறிய மேடவாக்கம் - -மடிப்பாக்கம் சாலை பள்ளம் மேடு தெரியாமல் விபத்து

ADDED : டிச 13, 2024 12:07 AM

மேடவாக்கம், தாம்பரம், கவுரிவாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிவாசிகள், கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிக்கு சென்றுவர முக்கிய வழித்தடமாக மேடவாக்கம்- - மடிப்பாக்கம் சாலை உள்ளது.
கடந்த 32 மாதங்களாக, இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சாலையின் அகலம் பாதியாக சுருங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தவிர, மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் முடிந்த பின்பே சாலையும் புதுப்பிக்கப்படும் என்பதால், இந்த வழித்தடம் வாகனப் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில், விபத்துகள் அதிகம் நடக்கும் இடமாக மாறியுள்ளது.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
மோசமான நிலையில் உள்ள இந்தச் சாலையில், வடிகால் வசதி ஏதும் இல்லை. இதனால், சிறு மழை பெய்தாலும் சாலையில் நீர் தேங்கி, வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது, 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நிற்பதால், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றுவதும் இல்லை; சாலையில் உள்ள மேடு பள்ளங்களை சீரமைப்பதும் இல்லை. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக மழைநீர் தேங்கி மேடு பள்ளம் தெரியாமல் விபத்துகள் அதிகரித்துள்ளன. எனவே, மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளை முடிக்கும் வரை காத்திருக்காமல், மழைநீரை வெளியேற்றவும், சலையை தற்காலிகமாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.