/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டி கழுத்தறுத்து கொலை போதை ஆசாமி வெறிச்செயல்
/
மூதாட்டி கழுத்தறுத்து கொலை போதை ஆசாமி வெறிச்செயல்
ADDED : நவ 13, 2024 02:35 AM

திருவொற்றியூர்,:திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மாரி, 55, இவரது மனைவி கவுரி, 52. தம்பதி திருவொற்றியூர் தேரடி, சன்னதி தெருவில், நடைபாதையில் தங்கி பழ வியாபாரம் செய்து வந்தனர்.
நேற்றிரவு, தம்பதி பழ வியாபாரம் செய்த போது, போதையில் வந்த நபர் ஒருவர், கோவிலுக்கு செல்லும் பெண்களிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார்.
இதை, மூதாட்டி கவுரி கண்டித்துள்ளார். சிறிது நேரத்தில் சிறிய கத்தியுடன் வந்த அந்த நபர், கவுரியின் கழுத்தை அறுத்துள்ளார். தடுத்த அவரது கணவர் மாரி கையையும் அறுத்துள்ளார்.
படுகாயமடைந்த மூதாட்டி கவுரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், மூதாட்டி உடலை கைப்பற்றி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
காயமடைந்த மாரியை மீட்டு, சிகிச்சைக்காக அனுப்பினர். பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த போதை நபரை, போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இதில் அவர், திருவொற்றியூர், ஈசாணி மூர்த்தி கோவில் தெருவைச் சேர்ந்த, தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்யும் சேகர், 52, என தெரிந்தது.
ஒரு மாதத்திற்கு முன், மூதாட்டி கவுரிக்கும் இவருக்கும் சண்டை ஏற்பட்டு, மூதாட்டி செருப்பால் அடித்துள்ளார். இந்த முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் கூறினர்.

