/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடைக்காரரிடம் நுாதன 'ஆட்டை' ஊழியர் சிக்கினார்
/
கடைக்காரரிடம் நுாதன 'ஆட்டை' ஊழியர் சிக்கினார்
ADDED : மார் 17, 2024 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்:கொளத்துார் பள்ளிசாலை தெற்கு மாட வீதியில் அருண், 24, என்பவர், வண்ண மீன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் சிவா, 19, என்பவர் வேலை பார்த்து வந்தார்.
அருணின் மொபைல்போனில் உள்ள 'கூகுள் பே' செயலியின் 'பாஸ்வேர்டான' ரகசிய குறியீட்டு எண்ணை நோட்டமிட்ட சிவா, அவரது 'கூகுள் பே' கணக்கில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக 1.75 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்த ராஜமங்கலம் போலீசார், சிவாவிடம் இருந்து 15,000 ரூபாயை மட்டும் மீட்டு, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

