/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புது சமூக நலக்கூடம் பணிக்கு அடிக்கல்
/
புது சமூக நலக்கூடம் பணிக்கு அடிக்கல்
ADDED : மார் 01, 2024 12:32 AM
வில்லிவாக்கம், அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டு சிட்கோ நகர், நான்காவது பிரதான சாலையில், 13 ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகராட்சி சார்பில் சமூக நலக்கூடம் கட்டப்பட்டது. இதை பயன்படுத்த, 2,000 ரூபாய் முதல் வாடகை வசூலிக்கப்பட்டதால், ஏராளமான ஏழை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
அதன் பின் முறையாக பராமரிக்காததால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்டது.
நம் நாளிதழில் பல முறை சுட்டிக்காட்டிய பின், இங்கு புதிதாக சமூக நலக்கூடம் கட்ட அரசு திட்டமிட்டது.
இதையடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றி அழகனின் மேம்பாட்டு நிதியில் இருந்து, 2.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின், 'டெண்டர்' விடப்பட்டு, பழைய கட்டடம் இடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, நேற்று கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

