/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகராட்சி பழைய அலுவலகம் பயன்பாடு இல்லாமல் வீண்
/
நகராட்சி பழைய அலுவலகம் பயன்பாடு இல்லாமல் வீண்
ADDED : மார் 15, 2024 12:37 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சி பழைய அலுவலகம், பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.
சென்னை அடுத்த பூந்தமல்லி நகராட்சி அலுவலகம், பூந்தமல்லி கரையான்சாவடியில் இயங்கி வந்தது.
இங்கு இடநெருக்கடி ஏற்பட்டதால், பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே, 4.83 கோடி ரூபாய் மதிப்பில், புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு முதல், புதிய கட்டடத்தில் நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் காரணமாக, பழைய அலுவலகம் மூடப்பட்டது.
இது, தற்போது வரை திறக்கப்படாமல், பராமரிப்பின்றி வீணாகிறது.
பூந்தமல்லியில் காவல் நிலையம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள், இடவசதி இல்லாமல் இயங்குகின்றன.
நகராட்சியின் இந்த பழைய அலுவலக கட்டடத்தை, வேறு ஏதாவது பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

