ADDED : அக் 18, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், புழல், வள்ளுவர் நகரிலுள்ள குபேர விநாயகர் கோவிலில் பூஜை செய்ய, நேற்று முன்தினம் பூசாரி கோவிலுக்கு சென்றார்.
கோவிலை சுற்றி மழைநீர் தேங்கிய நிலையில், அதில் நடந்து சென்ற பூசாரி, கோவில் இரும்பு 'கேட்'டை தொட்டதும், மின்சாரம் பாய்ந்து மயங்கியுள்ளார்.
இதைப் பார்த்த பெண் ஒருவர் சத்தமிட, பகுதிவாசிகள் காப்பாற்ற வந்தனர். அவர்களும் மின்சாரம் பாய்வதை உணர்ந்து சுதாரித்தனர். உடனே, ஒரு மரக்கட்டையால், கேட்'டை பிடித்திருந்த பூசாரி தள்ளினர்.
பின், அவரை சாலையில் கிடத்தி, சி.பி.ஆர்., எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
சற்று நேரத்தில் கண்விழித்த அவரை, மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற பூசாரி, நலமுடன் வீடு திரும்பினனார்.