/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திட்டப்பணியால் குழாய் உடைப்பு 10 நாளாக குடிநீரின்றி பரிதவிப்பு
/
திட்டப்பணியால் குழாய் உடைப்பு 10 நாளாக குடிநீரின்றி பரிதவிப்பு
திட்டப்பணியால் குழாய் உடைப்பு 10 நாளாக குடிநீரின்றி பரிதவிப்பு
திட்டப்பணியால் குழாய் உடைப்பு 10 நாளாக குடிநீரின்றி பரிதவிப்பு
ADDED : பிப் 18, 2025 12:18 AM

வடபழனி,கோடம்பாக்கம் மண்டலம், 130வது வார்டு வடபழனியில் திருநகர், என்.ஜி.ஓ., காலனி, காமாட்சியம்மன் காலனி என, 20க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
இப்பகுதிகளுக்கு, 100 அடி சாலையில் செல்லும் குழாயில் இருந்து இணைப்புகள் வழங்கப்பட்டு, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், வடபழனி 100 அடி சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், வடிகால் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளின்போது, திருநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கான குழாய் சேதமடைந்ததால், குடிநீரில் கழிவுநீர் கலந்தது.
கழிவுநீர் கலந்த குடிநீரை பயன்படுத்தியதால், சிறுவர்கள் முதல் முதியோர் வரை வாந்தி, பேதி, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பால் அவதிப்பட்டனர்.
இதனால், ஐந்து நாட்களாக அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதிவாசிகள், குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பணம் கொடுத்து கேன் வாட்டர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டறிய முடியாமல், வாரியம் திணறி வருகிறது.
ஒரு வாரமாக பிரச்னை
கழிவுநீர் கலந்த குடிநீர் பருகிய என் மகனுக்கு, ஒரு வாரமாக காய்ச்சல். அவனை அவ்வப்போது மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று வருகிறேன். ஆட்டோ ஓட்டி கிடைக்கும் வருமானத்தில், கேன் தண்ணீருக்கு தனியாக செலவு செய்யவும், மருத்துவமனைக்கு செலவு செய்யவும் அதிகம் பணம் தேவைப்படுகிறது.
குழாய் உடைப்பை கண்டறிய முடியாத நிலையே உள்ளது. தற்காலிக தீர்வாக லாரி குடிநீர் வழங்க வேண்டும்.
- வெங்கடேஷ்வரன்
ஆட்டோ ஓட்டுநர், திருநகர்