/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசுக்கு டிமிக்கி பிரபல ரவுடி கைது
/
போலீசுக்கு டிமிக்கி பிரபல ரவுடி கைது
ADDED : பிப் 23, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்கம், அரும்பாக்கத்தில், 25 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட பிரபல ரவுடியின் நெருங்கிய கூட்டாளியை, போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி சுதாகர் என்ற திக்குவாய் சுதாகர், 42. இவர், அரும்பாக்கம் பிரபல ரவுடியான ராதாவின் நெருங்கிய கூட்டாளி.
சுதாகர் மீது, கொலை உட்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த இவர், கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு வழக்குகளில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போலீசாருக்கு 'தண்ணி' காட்டி வந்தார்.
நேற்று, அரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த சுதாகரை, அரும்பாக்கம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.