/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை
/
முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை
ADDED : ஜூலை 11, 2025 12:19 AM
திருமலா பால் நிறுவன கருவூல மேலாளர் நவீன் பொலினேனி, பணம் கையாடல் குற்றச்சாட்டில், கொளத்துார் போலீஸ் துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புகார் அளித்து இரு வாரங்கள் ஆகியும் வழக்குப்பதியாமல், துணை கமிஷனர் நேரடியாக விசாரித்துள்ளார். அவர் விடுமுறையில் சென்றிருப்பது மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும்முன், மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றால், முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்பதே உண்மை.
உள்துறையை கட்டுப்பாட்டில் வைக்க அவரால் இயலவில்லை. அவரின் நிர்வாக தோல்விகளுக்கு வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா?
உடனே, நவீன் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடக்க வேண்டும். இரு வாரங்களாக வழக்கு பதிவு செய்யாமல், நவீன் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய துணை ஆணையர்மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அண்ணாமலை
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்

