/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடுவீதியில் பேய் ஓட்டிய சாமியார்; தலைதெறிக்க ஓடிய பகுதிவாசிகள்
/
நடுவீதியில் பேய் ஓட்டிய சாமியார்; தலைதெறிக்க ஓடிய பகுதிவாசிகள்
நடுவீதியில் பேய் ஓட்டிய சாமியார்; தலைதெறிக்க ஓடிய பகுதிவாசிகள்
நடுவீதியில் பேய் ஓட்டிய சாமியார்; தலைதெறிக்க ஓடிய பகுதிவாசிகள்
ADDED : பிப் 18, 2025 03:59 AM

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி 2வது ரயில்வே கேட் அருகே, காந்தி சாலை பிரதான தெரு உள்ளது. இந்த தெருவில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்த தெரு வழியாக, திருத்தணி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, பேருந்து நிலையம், பூ மார்க்கெட் மற்றும் பஜாருக்கு சென்று வருகின்றனர். இதனால் அதிகாலை 4:30 மணி முதல் நள்ளிரவு 11:00 மணி வரை மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.
இந்த தெருவில் பழனிசாமியார் என்பவர், ஒரு கடையை வாடகைக்கு எடுத்து பில்லி சூனியம், திருஷ்டி கழிப்பது, தோஷம், மந்திரம் சொல்வது, தாயத்து கட்டுவது போன்றவை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம், ஒரு பெண்ணை அவரது உறவினர்கள் பழனிசாமியாரிடம் அழைத்து வந்து பேய் பிடித்துள்ளதாக கூறியுள்ளனர்.
பின் சாமியார் இந்த பெண்ணின் உடலில், ஆண் பேய் இருப்பதாக கூறி, நடுவீதியில் அமர வைத்து, 'முனி' படப்பாணியில் பிரியாணி, மது, புகையிலை, பீடி, சுருட்டு கொடுத்து, அந்த பெண்ணை மது குடிக்க வைத்து பேய் ஓட்ட துவங்கி உள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, சாமியாரின் பேய் ஓட்டும் பணி நடந்துள்ளது. இதனால், அவ்வழியாக சென்றோர் பலரும், பீதியடைந்து வந்தவழியே திரும்பி, ஓட்டம் பிடித்தனர்.
அப்பகுதி கடைக்காரர்களும் பயத்தில் கடையை மூடி செயன்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.

