/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா வீச்சை திசைதிருப்ப நடந்த களேபரம் போலீசாரை தாக்கி கைதிகள் அட்டூழியம் போலீசாரை தாக்கி கைதிகள் அட்டூழியம்
/
கஞ்சா வீச்சை திசைதிருப்ப நடந்த களேபரம் போலீசாரை தாக்கி கைதிகள் அட்டூழியம் போலீசாரை தாக்கி கைதிகள் அட்டூழியம்
கஞ்சா வீச்சை திசைதிருப்ப நடந்த களேபரம் போலீசாரை தாக்கி கைதிகள் அட்டூழியம் போலீசாரை தாக்கி கைதிகள் அட்டூழியம்
கஞ்சா வீச்சை திசைதிருப்ப நடந்த களேபரம் போலீசாரை தாக்கி கைதிகள் அட்டூழியம் போலீசாரை தாக்கி கைதிகள் அட்டூழியம்
ADDED : ஆக 02, 2025 12:10 AM
சென்னை,போலீஸ் வேனில் சென்ற சிறைக்கைதிகளுக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் போதைப்பொருள் வீசியதை போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கைதிகள், வழிகாவலுக்கு வந்த போலீசாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அண்ணா நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ராபர்ட், 28. இவர் மீது, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ள ன.
மிரட்டல் கடந்த, பிப்., 26 மாலை, 7:15 மணியளவில், வீட்டருகே முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பலால், வெட்டி கொல்லப்பட்டார்.
இந்த கொலை வெறிபிடித்த கும்பல், அயனாவரத்தில் வீடு புகுந்து ரேவதி, 32 என்பவரையும் கொலை செய்ய முயன்றது.
முன் விரோதம் காரணமாக, ராபர்ட்டை கொலை செய்த பின், அது பற்றி சமூக வலைதளத்தில் வீடியோவும் வெளியிட்டனர்.
இதையடுத்து, அண்ணா நகர் காவல் நிலைய தனிப்படை போலீசார், அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடிகள் லோகுராஜ், 22, சங்கர், 26, சிலம்பரசன், 26, உட்பட ஆறு பேரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்கள் உட்பட, 26 கைதிகளின் நீதிமன்ற காவல் விசாரணையை நீட்டிக்க, அவர்களை நேற்று முன்தினம், எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
பின், நீதிமன்றத்தில் இருந்து புழல் சிறைக்கு, மூன்று எஸ்.ஐ.,க்கள் தலைமையில், 20 போலீசார் காவலுடன் அழைத்துச் சென்றனர்.
போலீஸ் வேன், வியாசர்பாடி பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள், வேனுக்குள் கஞ்சா பொட்டலத்தை துாக்கி வீசினர். அதை ரவுடிகள் பிடிக்க முயன்றபோது, போலீசார் தடுத்துள்ளனர். அப்போது, போலீஸ் வேன் கண்ணாடியை உடைத்த ரவுடிகள், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு கஞ்சா வீசிய நபர்களை போலீசார் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக, சம்பவத்தை திசை திருப்ப போலீசாரையும் தாக்கி உள்ளனர்.
அப்போது, 'உங்க மூஞ் சிய பார்த்து வச்சிருக்கோம். நாங்களெல்லாம் கொலைக்கு மேல கொலை பண்றவங்க, உங்கள சும்மா விட மாட்டோம்' என, ஆவேசமாக கத்தி கூச்சலிட்டு பெரும் களேபரத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித் தது.
விசாரணை அப்போது, போலீசாரை கைதிகள் தாக்கும் காட்சிகளை, பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
சம் பவம் குறித்து, கைதிகளின் வழிக்காவலுக்கு சென்ற மூன்று எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசாரிடமும் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும், போலீசாரை தாக்கிய கைதிகள் மீது, புதிதாக ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவலில் எடுத்துள்ளனர். கைதிகளுக்கு கஞ்சா வீச முயன்ற மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.
ரவுடிகள் ஆட்சிதான் நடக்குது தி.மு.க., ஆட்சியில் ரவுடிகள் ஆட்சி செய்கின்றனர். காவல் துறை வாகனத்தில், கைதிகளை போலீசார் சிறைக்கு அழைத்து செல்லும்போது, ரவுடிகள் மிரட்டுவதை பார்ப்பது, இந்த சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீது எந்த பயமும் இல்லை என்பதையே நிரூபிக்கிறது. இது, உண்மையிலே யே வருத்தம் அளிக்கிறது. - அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்

