/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடிக்கடி வெளியேறும் கழிவுநீரால் கடும் சேதமடைந்த சாலை
/
அடிக்கடி வெளியேறும் கழிவுநீரால் கடும் சேதமடைந்த சாலை
அடிக்கடி வெளியேறும் கழிவுநீரால் கடும் சேதமடைந்த சாலை
அடிக்கடி வெளியேறும் கழிவுநீரால் கடும் சேதமடைந்த சாலை
ADDED : நவ 12, 2024 12:35 AM

தி.நகர்,.நகரில் அடிக்கடி வெளியேறும் கழிவுநீர் பிரச்னையால், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலை மாறி உள்ளது.
கோடம்பாக்கம் மண்டலம், தி.நகர் 141வது வார்டில், சி.ஐ.டி., நகர் 3வது குறுக்கு தெரு உள்ளது.
இது, சி.ஐ.டி., நகர் 3 மற்றும் 4வது பிரதான சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது.
இச்சாலையில் கடைசியில், குடிநீர் வாரிய கழிவுநீர் உந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த கழிவுநீர் உந்து நிலையத்தில் மின் மோட்டார் அமைத்து, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் அனுப்பப்படுகிறது.
இந்த 3வது குறுக்கு தெருவில், அடிக்கடி பாதாள சாக்கடை வழியாக கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கி வந்தது. இதையடுத்து, குடிநீர் வாரியம் சார்பில், பள்ளம் தோண்டி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, சாலையை முறையாக சீர் செய்யாததால், சாலை சேறும் சகதியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
எனவே, கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதுடன், சாலையை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வி.மணிவண்ணன், 61, என்பவர் கூறியதாவது:
கடந்த ஓராண்டாக இச்சாலையில் கழிவுநீர் பிரச்னை நிலவி வருகிறது. இதற்காக, பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதனால், சாலை படுமோசமாக மாறி விட்டது. அதற்கு பதிலாக அங்குள்ள பாதாள சாக்கடை குழாயை மாற்றி அமைத்தால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.