/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைதை ஆட்டிறைச்சி கூடம் ரூ.50 கோடியில் மேம்பாடு
/
சைதை ஆட்டிறைச்சி கூடம் ரூ.50 கோடியில் மேம்பாடு
ADDED : பிப் 15, 2025 12:17 AM
சென்னை, சைதாப்பேட்டை, ஆடு இறைச்சி கூடத்தில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர், நேற்று ஆய்வு நடத்தினர்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
சைதாப்பேட்டை ஆடு இறைச்சி கூடம், 100 ஆண்டுகளுக்கு மேல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு, தினமும், 300க்கும் மேற்பட்ட ஆடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுகின்றன. முதல்வர் வழிகாட்டுதல்படி, சென்னை மாநகராட்சி சார்பில், 50 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தி, நவீன ஆட்டிறைச்சி கூடமாக தரம் உயர்த்தப்படும்.
இதில், சிறிய அளவிலான கடைகள், கழிவுகளை சுத்திகரிக்கும் வசதிகள் ஆகியவைகளும் அமைக்கப்படும். தென்சென்னை பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக ஆடுகள் அறுப்பது தவிர்க்கப்பட்டு, நவீன கூடத்தை பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

