/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெரிசலான சாலையில் சார் - பதிவாளர் அலுவலகம் பல ஆண்டுகள் பிரச்னைக்கு சொந்த கட்டடமே தீர்வு
/
நெரிசலான சாலையில் சார் - பதிவாளர் அலுவலகம் பல ஆண்டுகள் பிரச்னைக்கு சொந்த கட்டடமே தீர்வு
நெரிசலான சாலையில் சார் - பதிவாளர் அலுவலகம் பல ஆண்டுகள் பிரச்னைக்கு சொந்த கட்டடமே தீர்வு
நெரிசலான சாலையில் சார் - பதிவாளர் அலுவலகம் பல ஆண்டுகள் பிரச்னைக்கு சொந்த கட்டடமே தீர்வு
ADDED : டிச 15, 2025 05:07 AM

குரோம்பேட்டை: குரோம்பேட்டை, நியூ காலனி, இரண்டாவது பிரதான சாலையில், வாடகை கட்டடத்தில் பல்லாவரம் சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, ஜமீன் பல்லாவரம், ஈசா பல்லாவரம், பழைய பல்லாவரம், மடிப்பாக்கம், நன்மங்கலம் ஆகிய பகுதிகள், இந்த அலுவலக எல்லையில் அடங்கும்.
பத்திரப் பதிவு, அடமான பத்திரம், திருமண பதிவு, நலச்சங்கங்கள் பதிவு என, நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் இங்கு, வாடிக்கையாளர்கள் அமருவதற்கு போதிய இடவசதி இல்லை. ஆவணங்கள் வைப்பதற்கும், அதிகாரிகளுக்கும் போதிய அறைகள் இல்லை.
அதிகாரிகளுக்கு மட்டும் கழிப்பறை வசதி உள்ளது. பொதுமக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. நெருக்கடியான இடம் என்பதால், ஒரு சிலர் மட்டுமே நிற்க முடிகிறது. மற்றொரு புறம், பத்திரப்பதிவு செய்ய வருவோரின் கார், இருசக்கர வாகனங்களை நிறுத்த இடமின்றி தவிக்கின்றனர்.
ஏற்கனவே நெரிசல் கொண்ட இச்சாலையில், பத்திரப் பதிவுக்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், இன்னும் நெரிசல் அதிகரிக்கிறது. பல ஆண்டுகளாக நெருக்கடியான இடத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் இந்த அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கி, சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இப்பிரச்னையை பத்திரப்பதிவு துறை கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனால், ஒவ்வொரு நாளும், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இப்பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சொந்த கட்டடம் கட்டவோ அல்லது அனைத்து வசதிகளுடன் கூடிய வேறு இடத்திற்கு மாற்றவோ, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

