/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைதை கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு ரூ.1.30 கோடியில் குழாய் மாற்றம்
/
சைதை கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு ரூ.1.30 கோடியில் குழாய் மாற்றம்
சைதை கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு ரூ.1.30 கோடியில் குழாய் மாற்றம்
சைதை கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு ரூ.1.30 கோடியில் குழாய் மாற்றம்
ADDED : மார் 12, 2024 12:43 AM

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, 142வது வார்டிலுள்ள சந்து தெருக்களில் நிலவிய கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வாக, 1.30 கோடி ரூபாய் மதிப்பில், கழிவுநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோடம்பாக்கம் மண்டலம், 142வது வார்டில் மசூதி தெரு, மசூதி பள்ளம், சுப்பிரமணி சாலை, குமாரசாமி தெரு, முருகன் தெரு, நடராஜன் தெரு என, 15க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
இவை அனைத்தும், சந்து தெருக்களாக உள்ளன. இங்கு, பல நுாறு குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய்கள், 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டவை.
தற்போது, வீடுகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், பழைய கழிவுநீர் குழாய்கள் போதுமானதாக இல்லை. அத்துடன் அடிக்கடி கழிவுநீர் வெளியேறி, சந்துக்களில் தேங்கின.
இதனால், பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். தொடர் புகாரையடுத்து இப்பகுதிகளை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து குடிநீர் வாரியம் சார்பில், இந்த சந்துக்களில், 1.30 கோடி ரூபாய் மதிப்பில், கழிவுநீர் குழாய்களை மாற்றி அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.