/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரியாணிக்கு ஆசைப்பட்டு பைக் இழந்த வாலிபர்
/
பிரியாணிக்கு ஆசைப்பட்டு பைக் இழந்த வாலிபர்
ADDED : நவ 12, 2024 08:03 PM
ஓட்டேரி,:ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர் சுரேந்தர்,21. இவர், ஆவடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை, ஓட்டேரி ஸ்ட்ரான்ஸ் சாலையில், தன் யமஹா 'பைக்'கில் சென்றார். அப்போது எதிரே வந்த இளைஞர்கள் மூவரிடம், புளியந்தோப்பில் உள்ள ஒரு பிரியாணி கடைக்குச் செல்வதற்கான வழியைக் கேட்டுள்ளார்.
திடீரென அவர்கள் சுரேந்தரை தாக்கி, அவரிடமிருந்து பைக், மொபைல்போன் ஆகியவற்றை பறித்தனர். மேலும் சிலரை வரவழைத்து சுரேந்தரை தாக்கி, அவரது 'கூகுள் பே' வாயிலாக, 700 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
இதுகுறித்து சுரேந்தர், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டேரியைச் சேர்ந்த விஷ்வா,23, வேலுாரைச் சேர்ந்த விக்னேஷ்,21, 'மொட்டை' தினேஷ்,20, மற்றும் விஸ்வநாதன்,21, ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பைக் மற்றும் மொபைல்போனை மீட்டனர்.

