/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலில் குழந்தையிடம் தங்க கொலுசு திருட்டு
/
கோவிலில் குழந்தையிடம் தங்க கொலுசு திருட்டு
ADDED : டிச 15, 2024 07:38 PM
சென்னை:பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 45. மயிலாப்பூர் அ.தி.மு.க., வட்ட செயலர். நேற்று முன்தினம் இரவு, குடும்பத்துடன் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார்.
அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவரது 9 மாத குழந்தையின் காலில் அணிந்து இருந்த, 2 சவரன் கொலுசை மர்மநபர் திருடிச் சென்றார். இதை அறிந்த மகேஷ்குமார், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், பெண் ஒருவர் குழந்தையின் காலில் அணிந்து இருந்த தங்க கொலுசை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

